உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சூளகிரி தாலுகா அலுவலகத்தில் பயன்படுத்த முடியாத சுகாதார வளாகம்

சூளகிரி தாலுகா அலுவலகத்தில் பயன்படுத்த முடியாத சுகாதார வளாகம்

ஓசூர்: சூளகிரி தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், 15வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும், கழிவறை பைப்புகள் செப்டிக் டேங்குடன் இணைக்கப்படாமல் உள்ளன. அதனால், கழிவறைகளை பயன்படுத்த முடியவில்லை.தாலுகா அலுவலகத்திற்கு வரும் மக்கள், இயற்கை உபாதைகளை கழிக்க சிரமப்பட வேண்டியுள்ளது. பணியை சரியாக முடிக்காமல், பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், சூளகிரி பஞ்., மற்றும் ஒன்றிய நிர்வாகம் மெத்தனமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !