அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்
ஓசூர், தமிழக எல்லையான ஓசூரிலிருந்து, கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மாலை, 5:30 மணிக்கு சென்ற, 5 கார்கள் மற்றும் ஒரு லாரி, பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. அதிர்ஷ்டவசமாக கார்களில் சென்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஓசூர் ஹட்கோ போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.