மேலும் செய்திகள்
விளையாட்டு மைதானம் இளைஞர்கள் கோரிக்கை
10-Oct-2024
வேளாங்கண்ணி பள்ளி குழுமம்விளையாட்டு உபகரணம் வழங்கல்கிருஷ்ணகிரி, அக். 22--பர்கூர் ஒன்றியம் காரகுப்பம் கிராமத்தில், வேளாங்கண்ணி பள்ளி குழுமம் சார்பில், கிராமப்புற இளைஞர் விளையாட்டு திறன் மேம்பாட்டு பயிற்சி இயக்க துவக்க விழா நடந்தது. வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார். இதில், வேளாங்கண்ணி ஸ்கூல்ஸ் ஸ்போர்ட்ஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையின் மகளுமான டாக்டர் லாசியா தம்பிதுரை, திறன் மேம்பாட்டு பயிற்சி இயக்கத்தை துவக்கி வைத்து, கிராமப்புற இளைஞர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிரிக்கெட் பேட், ஸ்டம்ப், கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரங்ணகளை வழங்கி பேசுகையில், ''கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில், வேளாங்கண்ணி பள்ளி கல்வி அறக்கட்டளை சார்பில், இளைஞர்களை நல்வழிப்படுத்தி, விளையாட்டில் ஆர்வம் கொண்டு வரும் வகையில், இத்திட்டத்தை தொடங்கி உள்ளோம். தமிழகத்தில் சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் வருகின்றனர்.ஆனால் சிறிய கிராமங்களிலுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்நிலையை மாற்ற முயற்சி செய்கிறோம். தற்போது இலவசமாக விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளோம். இதன் மூலம் எதிர்காலத்தில் நிச்சயம் கிராமப்புற இளைஞர்கள், விளையாட்டு துறையில் சாதனை பெற முடியும்,'' என்றார்.இதேபோல், சிந்தகம்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, பெலவர்த்தி ஆகிய இடங்களில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
10-Oct-2024