வேங்கடரமண சுவாமி திருத்தேர் வீதி உலா
ஊத்தங்கரை, ஊத்தங்கரை நகரின் மையப்பகுதி யில், காந்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத, வேங்கடரமண சுவாமி ஆலயத்தில், புரட்டாசி மாத, 3ம் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வேங்கடரமண சுவாமியின் திருத்தேர் வீதி உலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதை, பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ரவி, பொருளாளர் திலீப்சிங், தர்மகர்த்தா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.