உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சுற்றித்திரியும் ஒற்றை யானைகள் கிராம மக்கள், விவசாயிகள் அச்சம்

சுற்றித்திரியும் ஒற்றை யானைகள் கிராம மக்கள், விவசாயிகள் அச்சம்

தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கிரியனப்பள்ளி, ஆலஹள்ளி, சம்பந்தகோட்டை சுற்றுப்புற கிராமங்களில் கடந்த, 2 மாதத்திற்கும் மேலாக, ஒற்றை யானை சுற்றித்திரிகிறது. தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் மொத்தம், 5 யானைகள் தனித்தனியாக சுற்றி வருகின்றன. இதனால் வனத்தை ஒட்டிய விவசாய நிலங்களில் பயிர்கள் சேதமாகி வருகின்றன. குறிப்பாக, கிரி என்ற ஒற்றை யானை ஆக்ரோஷமாக வனத்தை ஒட்டிய கிராமங்களில் சுற்றித்திரிவதால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.நேற்று முன்தினம் மாலை, அஞ்செட்டி அருகே சாலையில், ஒற்றை யானை நீண்ட நேரமாக உலா வந்தது. அதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து, யானை சாலையை கடந்து செல்வதற்காக, சிறிது தொலைவில் காத்திருந்தனர். யானை உலா வருவதை, வாகன ஓட்டிகள் தங்கள் மொபைல்போன்களில் வீடியோ எடுத்தனர். சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து சென்ற பின், வாகன போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை