ஒகேனக்கல்லில் நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 14,000 கன அடியாக அதிகரித்தது.தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதி களான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த, ஒரு வாரமாக மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 6,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 4:00 மணிக்கு, 14,000 கன அடியாக அதிகரித்து வந்தது. இதனால் அங்குள்ள மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் கொட்டுகிறது.