உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை ஆற்றில் தொடரும் வெள்ளம்

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை ஆற்றில் தொடரும் வெள்ளம்

ஓசூர், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்ததால், தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 2,075 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையால், நேற்று காலை நீர்வரத்து, 2,507 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணை பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 2,450 கன அடி நீர் திறக்கப்பட்டது. 1,000 கன அடிக்கு மேல் தென்பெண்ணை ஆற்றில் நீர் திறந்தாலே, கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். நேற்றுடன், 8வது நாளாக, 1,000 கன அடிக்கு மேல் நீர் சென்றது. அதனால், ஆற்றங்கரையோரத்திலுள்ள கெலவரப்பள்ளி, முத்தாலி, மோரனப்பள்ளி, பேரண்டப்பள்ளி, தொரப்பள்ளி, ஆலுார், நல்லகானகொத்தப்பள்ளி, உலகம், வெங்கடேசபுரம், காமன்தொட்டி, அட்டகுறுக்கி, பாத்தகோட்டா ஆகிய, 12 கிராமங்களுக்கு, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவுப்படி, நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது. தென்பெண்ணை ஆற்றில் நேற்றும், ரசாயன நுரையுடன் நீர் பெருக்கெடுத்து ஓடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை