மேலும் செய்திகள்
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
25-Aug-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 4 நாட்களாக தொடர்ந்து, 517 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து, 517 கன அடிநீர் திறக்கப்பட்டிருந்தது. போதிய மழையின்றி நேற்று அணைக்கு நீர்வரத்து, 469 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து பாசன கால்வாயில், 179 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 170 கன அடி என மொத்தம், 349 கன அடிநீர் திறக்கப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 49.95 அடியாக இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக ராயக்கோட்டையில், 20 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், கே.ஆர்.பி., அணை, 15.6, கிருஷ்ணகிரி, 7, பாரூர், 5.40, நெடுங்கல் மற்றும் தளி தலா, 5, ஓசூர், 4, கெலவரப்பள்ளி அணை, 3, அஞ்செட்டி, 2.40, போச்சம்பள்ளி, 1.20 மி.மீ., என மொத்தம், 73.6 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
25-Aug-2025