கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் சரிந்து வந்த நிலையில், தற்போது பரவலாக மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 81 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 171 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து பாசனத்திற்கு கால்வாய்களில், 171 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 47.80 அடியாக இருந்தது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக, கெலவரப்பள்ளி அணை பகுதியில், 25 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே போல், அஞ்செட்டி, 20, தேன்கனிக்கோட்டை, 18, ராயக்கோட்டை, 15, ஓசூர், 10, கிருஷ்ணகிரி, 5.30, சூளகிரி, 5, சின்னாறு அணை, 5, கே.ஆர்.பி., அணை, 2.80 என மொத்தம், 106.10 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.