மேலும் செய்திகள்
மா.திறனாளிகள் நலத்துறை 150 பேருக்கு பணியாணை
17-Jun-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐ.இ.எல்.சி., பார்வையற்றோர் பள்ளிக்கு, தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக பொறுப்பு நிதியில், 1.08 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளி சீருடைகள், நான்கு சக்கர வாகனம், மாணவர் விடுதிகள், ஆரம்பகால பயிற்சி மையம் மறுசீரமைப்பு பணிகள், சமூக மையம், கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார். தொடர்ந்து, மறுசீரமைக்கப்பட்ட ஆரம்பகால பயிற்சி மையத்தை திறந்து வைத்து, தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு நினைவு பரிசாக கேடயங்களை வழங்கி கவுரவித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், பள்ளி தாளாளர் லாரன்ஸ் இன்பராஜ், கிருஷ்ணகிரி தாசில்தார் சின்னசாமி, தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பிரசாத், ரமேஷ், கண்ணன், காட்வின், ஈஸ்டர் ரவி, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
17-Jun-2025