உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காவேரிப்பட்டணத்தில் மனைவி நல வேட்பு விழா

காவேரிப்பட்டணத்தில் மனைவி நல வேட்பு விழா

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மற்றும் ஓசூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளைகள் இணைந்து, நேற்று காவேரிப்பட்டணத்தில் மனைவி நல வேட்பு விழா நடத்தின. இதில், போதை பொருள் விழிப்புணர்வு, அதிகளவில் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், உடல் நலம் பேணுதல் குறித்து, துணை பேராசிரியர் மாதம்மாள் தலைமையில் கலைநிகழ்ச்சி நடந்தது. இறை வணக்கம், குரு வணக்கம், தவம் ஆகியவை நடந்தது. செயல் தலைவர் வெங்கடேசன் வரவேற்றார். தலைவர் குமார் முன்னிலை வகித்தார். மண்டலத் தலைவர் ராஜூ பேசினார்.இதில், திருவாரூர் உலக சமுதாய சேவா சங்க பேராசிரியர் அமுதா ராமானுஜம், மனைவி நல வேட்பு, காந்த பரிமாற்ற தவம் குறித்து பேசினார். அதில், 120க்கும் மேற்பட்ட கணவன் - மனைவி, ஒருவருக்கொருவர் மாலை மாற்றி, கணவன் மனைவியின் தலையில் பூச்சூடி, வாழ்க்கை இனிதாக அமைய, மனைவி தன் கணவனுக்கு பழங்களை கொடுத்து, ஒருவருக்கொருவர் கண்களை நேருக்கு நேர் பார்த்து, ஜீவகாந்த பரிமாற்ற நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு தம்பதியராக பிரபு, தமிழ்செல்வி பங்கேற்றனர். துணை பேராசிரியர் கோவிந்தசாமி நன்றி கூறினார். துணை பேராசிரியர் மாதம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ