மேலும் செய்திகள்
கலவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி
13-Jul-2025
உத்தனப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர் அடுத்த சூளகிரி அருகே, கோபசந்திரம் தட்சின திருப்பதி கோவில் பின்புறம் உள்ள தென்பெண்ணை ஆற்றில், 50 முதல், 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாக உத்தனப்பள்ளி போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இறந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் பெண் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, மாயமான பெண்கள் விபரங்களை சேகரித்து, உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
13-Jul-2025