மேலும் செய்திகள்
வேன் மீது பைக் மோதல் தனியார் ஊழியர் சாவு
12-Jul-2026
கிருஷ்ணகிரி:திருவண்ணாமலை மாவட்டம், மேல்சிலம்பாடியை சேர்ந்தவர் சடையன், 55, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் சென்றார். மதியம், 1:00 மணியளவில் செந்தாரப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் சென்றபோது, எதிரில் வேகமாக வந்த ஹோண்டா அமேஸ் கார் மோதி பலியானார். கந்திகுப்பம் போலீசார், காரை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம், பெங்களூரு கங்காபுரம் சாலையை சேர்ந்த ஸ்ரீராம்குமார், 50, என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
12-Jul-2026