உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் பயிற்சிக்கு சேரலாம்

முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் பயிற்சிக்கு சேரலாம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, கல்லுாரி முதல்வர் பூவதி வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரியில் முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் சான்றிதழ் படிப்பிற்காக, 25 மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு, அரசு அனுமதி அளித்துள்ளது. இச்சான்றிதழ் படிப்பு சர்வதேச முதியோர் தினமான, ஜூலை, 1 முதல், துவங்கப்பட உள்ளது. இதில் பயில, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, 10ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியராக இருக்க வேண்டும். மூன்று மாத சான்றிதழ் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையில், கல்லுாரி முதல்வருக்கே முழு அதிகாரம் உள்ளது.வரும், ஜூலை 1 முதல், செப்., வரை முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் சான்றிதழ் வகுப்புகள் நடக்கும். இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் வரும், 25 மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பத்தை நேரடியாகவோ அல்லது கிருஷ்ணகிரி அரசு கல்லுாரி முதல்வர் அலுவலகத்தில் சேருமாறு தபாலிலோ அனுப்பலாம். இதற்கான கட்டணம் முற்றிலும் இலவசம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை