உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நீச்சல் போட்டியில் வெற்றி

நீச்சல் போட்டியில் வெற்றி

மதுரை: தமிழ்நாடு, புதுச்சேரி சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டி பொள்ளாச்சி தீஜா லைப் பள்ளியில் நடந்தது. மதுரை தெப்பக்குளம் ஏ.ஜெ., பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவன் தருண்விஷ்ணு 14 வயதிற்குட்பட்டோர் 50 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் தேசிய போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றார்.இவரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாநில நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின், இணைச்செயலாளர் கண்ணன், பயிற்சியாளர் செல்வபிரசன்னா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை