| ADDED : ஜூலை 10, 2024 09:30 PM
மதுரை:மதுரை ஐராவதநல்லுார் அருகே கல்லம்பல் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றின் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இங்கு டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணிக்கு, உ.பி.,யை சேர்ந்த ஆறு தொழிலாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தங்கி பணியில் ஈடுபட்டனர். நேற்று விடுமுறையில் இருந்த அவர்களில் கியானந்த்பிரதாப், 22, மசூதன் பிரஜாபதி, 30, ஆகிய இருவரும் கல்லம்பல் மேம்பால பகுதிக்கு சென்றனர்.மேம்பாலம் அடியில் ரயில்வே தண்ட வாளத்தை மாலை 4:00 மணிக்கு கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் மதுரையில் இருந்து மானாமதுரை வரை தண்டவாள ஆய்வுக்காக இயக்கப்பட்ட ரயில் இன்ஜின், அவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.தகவல் அறிந்த மதுரை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரதா, எஸ்.ஐ., கேசவன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.