உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 25,000 ரூபாய் கடனுக்கு ரூ.15 லட்சம் கந்துவட்டி

25,000 ரூபாய் கடனுக்கு ரூ.15 லட்சம் கந்துவட்டி

மதுரை : மதுரை, யாகப்பா நகர் பாண்டியன், 45; மினி சரக்கு வேன் டிரைவர். தெப்பக்குளம் பகுதி ராமகிருஷ்ணனிடம், 2021ல், 25,000 ரூபாய் கடன் வாங்கி மாத தவணை செலுத்தி வந்தார். பின், செலுத்த கால தாமதம் ஆனதால் வட்டிக்கு மேல் வட்டி போட்டு, 15 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.அதிர்ச்சியடைந்த பாண்டியன், கடந்த மே 18ம் தேதி மனைவியின் 3 சவரன் செயினை அடகு வைத்து 35,000 ரூபாயை ராமகிருஷ்ணனிடம் தந்தார். 'இத்தொகையை வட்டியில் கழித்துக்கொள்கிறேன். 15 லட்சம் ரூபாயை ஒரு மாதத்திற்குள் தர வேண்டும்' என அவர் மிரட்ட, பயந்து போன பாண்டியன் விஷம் குடித்தார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.ராமகிருஷ்ணன் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்புசாமி
ஜூன் 01, 2024 08:50

இன்கம் டாக்ஸ் ஆபீஸ்லேருந்து கூடத்தான் இதுமாதிரி நோட்டீஸ் வருது. அரசு எவ்வழி. மக்கள் அவ்வழி.


Sankaran Natarajan
ஜூன் 01, 2024 16:00

இது முறையற்ற கருத்து. வந்தால் உங்கள் ஆடிட்டரிடம் தெரிவித்து தகுந்த தீர்வு காணலாம். அல்லது உங்களது வருமானவரி அதிகாரியை நேரில் சந்தித்து விளக்கம் பெறலாம். கந்துவட்டியுடன் சேர்ப்பது தவறான ஒப்பீடு.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 01, 2024 21:57

சர்வாதிகாரி ஆளும் மாநிலத்தில் வேறு ப்படி கருத்து சொல்வீங்க சாமி


வாய்மையே வெல்லும்
ஜூன் 01, 2024 22:08

அரசு இயந்திரம் சும்மா இருக்கையில் அப்புசாமி போன்ற அரைவேக்காடு ஆட்கள் ஆடிபார்ப்பார்கள்


subramanian
ஜூன் 01, 2024 08:47

இது வெளியில் வந்த ஒரு கேஸ் . ஆனால் இதைப்போல பல்லாயிரம் கந்து வட்டி கொடுமைகள் தமிழகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது . உள்ளூர் திமுக இதையெல்லாம் செய்கிறது. நீங்கள் எந்த வழியிலும் தீர்வு காண முடியாதபடி , எல்லா இடத்திலும் ஆள் வைத்து அராஜகம் செய்வார்கள்.


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ