உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.70 கோடி தங்கம்; தப்பு கணக்கால் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.70 கோடி தங்கம்; தப்பு கணக்கால் மறுமதிப்பீடு செய்யப்படுகிறது

மதுரை : மதுரையில் தேர்தல் பறக்கும்படையிடம் பிடிபட்ட ரூ.4.70 கோடி மதிப்பிலான தங்கநகைகளின் மதிப்பீடு வருமானவரித்துறையின் மதிப்பீட்டுடன் ஒத்துப்போகாததால் மறுமதிப்பீடு செய்யப்பட உள்ளது.தேர்தல் நன்னடத்தை விதிபடி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம், பரிசு பொருட்களை எடுத்துச் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் மதுரை கிழக்கு சட்டசபை தொகுதி வண்டியூர் டோல்கேட் பகுதியில் நெல்லையில் இருந்து மதுரைக்கு 4 தனியார் நிறுவனங்களுக்கு வேனில் கொண்டு வரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆவணங்கள் இல்லாததால் 17 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4.70 கோடி என மதிப்பிட்டனர்.நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. நகை மதிப்பீடு செய்த ஆவணங்கள் வருமான வரித்துறையிடமும் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை அத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் நகைகளுக்கும், ஆவணங்களுக்கும் கணக்கீடு ஒத்துப்போகவில்லை. இதனால் மறுமதிப்பீடு செய்து தர வருவாய்த் துறையினரிடம் வருமானவரித்துறை கோரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ