எலி மருந்து விற்பனையா67 கடைகளில் சோதனை
மதுரை: மதுரையில் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட எலி கொல்லி மருந்துகள், பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் விற்கப்படுகிறதா என இரண்டாவது நாளாக ஆய்வு நடந்தது.வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமையில் வேளாண், தோட்டக்கலை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்கள், மளிகைக்கடைகள், பெட்டி கடைகள் என 67 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.தடை செய்யப்பட்ட எலி மருந்து (3சதவீத மஞ்சள் பாஸ்பரஸ்), வீட்டு பயன்பாட்டிற்கு வராத ப்ரோமோ டையலான், அதிக அளவில் உள்ளஜிங் பாஸ்பைடு (2சதவீதம்) மருந்துகள் என 9.1 கிலோ அளவிற்குகண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.கலெக்டர் சங்கீதாகூறுகையில், ''மத்தியபூச்சிக்கொல்லி வாரியத்தில் பதிவு செய்தால்தான் எலி கொல்லிமருந்துகளை விற்க முடியும்.வீடுகளில் எலிகளை கட்டுப்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரு சதவீத ஜிங் பாஸ்பைடு அளவிலான மருந்துகளை கவனித்து வாங்கவேண்டும்'' என்றார்.