உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆண்டில் 4008 பேருக்கு கண்ணான கண்ணே...

ஆண்டில் 4008 பேருக்கு கண்ணான கண்ணே...

மதுரை; மதுரை அரசு மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவில் ஓராண்டில் 4008 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.டாக்டர்கள் கூறியதாவது: குளுக்கோமா என்பது கண்ணில் அழுத்தம் காரணமாக கண் நரம்பை பாதிக்கும். கண் வெளிப்பார்வை பாதிக்கும். எல்லா வயதினருக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். கண்ணில் முழுப்பார்வை சுருங்கிக் கொண்டே வரும். 'டியூப்' போல பார்வை தெரியும். சுற்றியுள்ள பகுதிகளில் பார்வை மறைந்து விடும். கண் அழுத்தத்தை கண்டறிந்து அதற்கேற்ப சொட்டுமருந்து பயன்படுத்தினால் சரியாகி விடும். கண்நோய் பிரிவில் தினமும் 20 பேர் வரை இந்த பிரச்னைக்கு வருகின்றனர். அதில் குழந்தைகள் இரண்டு பேர்.40 வயதுக்கு மேற்பட்ட 2 சதவீதம் பேருக்கு குளுக்கோமா பிரச்னை உள்ளது என்பதால் ஆரம்பநிலை பரிசோதனை அவசியம். ஓராண்டில் 4008 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் 3031 பேருக்கு காட்ராக்ட், 184 பேருக்கு குளுக்கோமா அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை