உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆவின் பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக புகார்

ஆவின் பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக புகார்

மதுரை: மதுரையில் வினியோகிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் சில இடங்களில் கெட்டுப்போய் இருந்ததாக புகார் எழுந்துள்ளது.மதுரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெப்போக்கள் மூலம் ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. நேற்று பழங்காநத்தம், ஆரப்பாளையம், பெத்தானியாபுரம், செல்லுார் பகுதிகளில் சில டெப்போக்களில் நுகர்வோர்கள் அதிகம் வாங்கும் அரை லிட்டர் கோல்டு, டீக்கடை நடத்துவோர் வாங்கும்'டீ மேட்' பாக்கெட்டுகளிலும் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்தது.முகவர்கள் கூறுகையில், இப்பிரச்னை 2 நாட்களாக சில இடங்களில் கிளம்பி உள்ளது. அதிகம் விற்பனையாகும் தயிர் பாக்கெட்டுகளும் தரம் குறைவாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்துஉள்ளோம். நேற்று கெட்டுப் போன பாக்கெட்டுகளை ஆவின் திரும்ப பெற்று, மாற்று பாக்கெட்டுகள் வழங்கியது என்றனர்.பொது மேலாளர் சிவகாமி கூறுகையில், நேற்று சில இடங்களில் இப்பிரச்னை இருந்தது. உடனே சரி செய்யப்பட்டது. சில கடைகளில் அதிக நேரம் பாக்கெட்டுகளை வெளியே வைத்திருப்பதாலும், மீண்டும் வெயில் அதிகரித்து திடீர் வெப்பம் உயர்வாலும் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை