உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கட்டடம் கட்டியதற்கு பணம் தராததால் ஓராண்டாக திறக்கப்படாத ரேஷன் கடை

கட்டடம் கட்டியதற்கு பணம் தராததால் ஓராண்டாக திறக்கப்படாத ரேஷன் கடை

கொட்டாம்பட்டி : கருங்காலக்குடி வைரவன்பட்டியில் புதிய ரேஷன் கடை கட்டி ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.அய்யாபட்டி ஊராட்சி வைரவன்பட்டியில் வாடகை கட்டடத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்படுகிறது. ஓராண்டுக்கு முன் குறிஞ்சிநகர், வைரவன்பட்டி மத்தியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021- -22 ரூ. 8.70 லட்சத்தில் புதிய கடை கட்டப்பட்டது. ஆனால் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடக்கிறது.கார்டுதாரர்கள் கூறியதாவது: புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வராததால் திறந்த வெளியில் வெயிலில் காத்து கிடந்து ரேஷன் பொருட்கள் வாங்குகிறோம். குறிஞ்சிநகர் பகுதி கார்டுதாரர்கள் 3 கி.மீ., துாரம் நடந்து வந்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள். மேலும் ஓராண்டிற்கு மேல் புதிய கட்டடம் பூட்டி கிடப்பதால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்றனர்.ஊராட்சி தலைவர் மற்றும் ஒப்பந்ததாரர் கிருஷ்ணன் கூறுகையில், ரேஷன் கடை கட்டியதற்கு பணம் வராததால் திறக்கவில்லை. பொதுமக்கள் கேட்டு கொண்டதால் உடனடியாக ரேஷன் கடை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ