உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆயிரம் விதைப்பந்து துாவும் நிகழ்ச்சி

ஆயிரம் விதைப்பந்து துாவும் நிகழ்ச்சி

மதுரை, : மதுரை யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் விதைப்பந்து துாவும் நிகழ்ச்சி நரசிங்கம் பெருமாள் கோயில் அருகே நடந்தது.ஒத்தக்கடை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தென்னவன் வரவேற்றார். சமூக ஆர்வலர் பிரபு தொகுத்து வழங்கினார்.ஆலோசகர் ராகேஷ் முன்னிலை வகித்தார். அரசின் 'பசுமை சாம்பியன்' விருது பெற்ற அசோக்குமார், விஸ்வா ஆகியோருக்கு 'பசுமை காப்பாளர்' விருது வழங்கப்பட்டது.யானைமலையை சுற்றி 10 கி.மீ., துாரத்திற்கு 1000 விதைப்பந்துகள் துாவப்பட்டன. ஆலோசகர் கார்த்திகேயன், வனவர் மூர்த்தி, சிலம்ப மாஸ்டர் பாண்டி, மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை