உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசரடி ரவுண்டானா பணிகள் விரைவில் துவங்கும்

அரசரடி ரவுண்டானா பணிகள் விரைவில் துவங்கும்

மதுரை, : மதுரையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க அண்ணா பஸ் ஸ்டாண்ட் முதல் சிவகங்கை ரோடு, பழங்காநத்தம் முதல் திருநகர் வரையான ரோடு, வில்லாபுரம் முதல் விமான நிலையம் வரையான ரோடுகள் அகலப்படுத்த பணிகள் நடந்து வருகின்றன.இவ்வகையில் அரசரடியில் ரூ.5 கோடி மதிப்பில் 25 மீட்டர் சுற்றளவில் ரவுண்டானா அமைய உள்ளது.இந்த சந்திப்பில் தேனி ரோடு, பெரியார் பஸ் ஸ்டாண்ட் ரோடு, மத்திய சிறை ரோடு, ஆரப்பாளையம் ரோடுகள் சந்திக்கின்றன. இங்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடப்பதால் அவ்வப்போது நெரிசல் ஏற்படுகிறது. எனவே ரவுண்டானா அவசியமாகிறது. இதற்கான நெடுஞ்சாலைத்துறை ஆய்வு பணிகள் முடிந்துள்ளன.முன்னேற்பாடு பணிகளாக குறியீடு செய்யும் பணிகள், 2 சிறிய பாலங்கள், கால்வாய் ஓரம் சுவர் கட்டுவதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. மின்கம்பங்களை இடமாற்றம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ