| ADDED : ஜூன் 08, 2024 06:05 AM
மதுரை : மதுரையில் 13 நகர்ப்புற சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மேயர் இந்திராணி பொன்வசந்த் தெரிவித்தார்.மதுரை தெற்குவாசல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தரச்சான்று வழங்குவதற்காக தேசிய தரச்சான்று திட்டம் (என்.கியூ.ஏ.எஸ்.,) பெங்களூரு சுகாதார தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் நிஷாந்த், டில்லி துணை நர்சிங் கண்காணிப்பாளர் வயலட் சாட்டர்ஜி ஆய்வு செய்தனர். ஆய்வகம், மருந்துகள் இருப்பு, பதிவேடுகள் பராமரிப்பு, மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேயர் இந்திராணி பொன்வசந்த் பங்கேற்றார்.ஆய்வுக்கு பின் மேயர் கூறுகையில், மாநகராட்சியில் செல்லுார், முனிச்சாலை, அண்ணாதோப்பு, திருநகர், ஆனையூர், மஸ்தான்பட்டி ஆகிய 6 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் கடந்தாண்டு தேசிய தரச்சான்றுகள் பெற்றன. தற்போது தெற்குவாசல் உட்பட மேலும் 13 சுகாதார நிலையங்கள் இச்சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆய்வுகள் முடிந்துள்ளன என்றார். துணை மேயர் நாகராஜன், நகர்நல அலுவலர் வினோத்குமார், சுகாதார குழு தலைவர் ஜெயராஜ், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் கோதை பங்கேற்றனர்.