உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேளாண் கல்லுாரி மாணவியர் பயிற்சி

வேளாண் கல்லுாரி மாணவியர் பயிற்சி

உசிலம்பட்டி : உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் கல்லுாரி 4 ஆம் ஆண்டு மாணவியர் கிராம வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தில் செல்லம்பட்டி பகுதியில் தங்கி பயிற்சி பெறுகின்றனர். இயற்கை வழியில் பாரம்பரிய நெல் பயிரிடும் விவசாயி அலெக்ஸ் தோட்டத்தில் அப்பகுதி விவசாயிகளுடன் இணைந்து இயற்கை வழி உரங்கள், பூச்சிவிரட்டி உள்ளிட்டவற்றை பாரம்பரிய முறையில் தயாரிக்கும் பயிற்சி மேற்கொண்டனர். விவசாயத்தில் சந்திக்கும் இடர்பாடுகள், அவற்றை விவசாயிகள் எப்படி எதிர்கொள்கின்றனர் குறித்து கலந்துரையாடல் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி