உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி

விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி

திருமங்கலம் : கள்ளிக்குடி வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் (அட்மா) கீழ் மறவப்பட்டியில் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர் கீதா தலைமை வகித்தார். இயற்கை விவசாயி காமேஸ்வரன், செயற்கை உரம், பயிர் சுழற்சி, பயிர் கழிவுகள், கால்நடை எருக்கள், மண்புழு உரம், வேம்பு பொருட்களின் பயன்பாடு, பண்ணைக்கு வெளியே கிடைக்கும் அங்கக கழிவுகள், உயிர் உரங்கள், இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்து பேசினார். உதவி வேளாண் அலுவலர் சின்னச்சாமி, வேளாண் வணிக உதவி அலுவலர் சங்கர் கணேஷ், தொழில்நுட்ப மேலாளர் இந்திராதேவி பேசினர். அலுவலர் லாவண்யா நன்றி கூறினார்.ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் யுவராஜ்குமரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை