எய்ம்ஸ் செங்கல்: பா.ஜ., கிண்டல்
திருப்பரங்குன்றம்: மதுரை பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், மண்டல் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், ராக்கப்பன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் வேல்முருகன் உட்பட நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் தரிசனம் செய்தனர்.சிவலிங்கம் கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் 35 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2027 ஜனவரியில் திறக்க வாய்ப்புள்ளது. சட்டசபை தேர்தலின்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டட பகுதியில் இருந்த செங்கலை ஒருவர் எடுத்துச் சென்று விட்டார். அதை எடுத்த இடத்திலேயே அவர் வைக்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை தீபத்துாணில் ஏற்ற வேண்டும். 2026ல் தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமையும். அப்போது தீபம் ஏற்றுவோம்'' என்றார்.