முன்னாள் மாணவர் சந்திப்பு
மதுரை: மதுரை டி.வி.எஸ்., உயர்நிலைப் பள்ளியில் 1975ல் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் 'பொன்விழா மறுசந்திப்பு' நிகழ்ச்சி நடந்தது.ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் பாபு கூறுகையில், ''எங்கள் பந்தம் கல்வி ஆண்டுகளைத் தாண்டி 6 தசாப்தங்களாக நீடிக்கும் ஒரு பொக்கிஷம். பல மாதங்களாக திட்டமிட்டு, பள்ளிப் பருவ நினைவுகளை மீட்டெடுத்து, படித்த பள்ளியை மீண்டும் பார்வையிட்டு, நண்பர்களுடன் இணைந்திருக்கும் வாய்ப்பு கிடைத்தது'' என்றார்.தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மட்டுமின்றி மும்பை, பெங்களூரு, அகமதாபாத், வெளிநாடுகளில் இருந்தும் நண்பர்கள் பலர் பங்கேற்றனர்.