| ADDED : ஆக 08, 2024 05:06 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் ஆடிப்பூரத் திருவிழா நடந்தது.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்ஸவர் சன்னதியில் கோவர்த்தனாம்பிகை எழுந்தருளினார். அம்பாள் முன் வெள்ளிக் குடத்தில் புனிதநீர் நிரப்பி, பூஜை நடந்தது. அரிசி, நெல், வெல்லம், வெற்றிலை, பாக்கு, காதோலை, கருகமணி, வேப்பிலை, மஞ்சள் கிழங்கு, வளையல்கள், வாழைப்பழம் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு, அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது.படிகளில் வைத்திருந்த நெல், அரிசியால் அம்பாள்முன் மூன்று முறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து, புனிதநீர் அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டன. இரவு அம்பாள் சிம்மாசனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.திருநகர்: சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை முடிந்து வளையல்கள் அலங்காரமாகி பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது.