உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அந்தோணியார் சர்ச் ஆண்டு விழா துவக்கம்

அந்தோணியார் சர்ச் ஆண்டு விழா துவக்கம்

மதுரை : மதுரை கரிமேடு அந்தோணியார் சர்ச் 134ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.அலங்கரிக்கப்பட்ட கொடி பவனியாக எடுத்துவரப்பட்டு வாயிலில் உள்ள கொடிமரத்தில் ஜெபமாலை அன்னை சர்ச் பாதிரியார் அமல்ராஜ் ஏற்றி வைத்து சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார். பல்வேறு பங்குகளை சார்ந்த பாதிரியார்கள் பல தலைப்புகளில் மறையுறை வழங்கினர். ஜூன் 15 திருப்பலி, மின் அலங்கார தேர்பவனி நடக்கிறது. ஜூன் 16 மாலை திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற்று ஜூன் 17ல் சமபந்தி விருந்து நடக்கிறது. ஏற்பாடுகளை பாதிரியார் ஜோசப், உதவி பாதிரியார் மதியழகன் தலைமையில் சர்ச் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை