உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிறவெறி எதிர்ப்பு தினம்

நிறவெறி எதிர்ப்பு தினம்

மதுரை, : காந்திக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் நடந்த நிறவெறியின் எதிர்ப்பு தினத்தின் 131 வது ஆண்டு நிகழ்வு மதுரை காந்தி மியூசியத்தில் நடந்தது. காப்பாட்சியர் நடராஜன் தலைமை வகித்தார். தென்னாப்பிரிக்காவில் காந்தி ரயிலில் முதல் வகுப்பில் இருந்து தள்ளி விடப்பட்ட மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையம் சென்று வந்த அனுபவங்களை மியூசிய செயலாளர் நந்தாராவ் பகிர்ந்து கொண்டார்.காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் பேசுகையில் ''காந்தி மகாத்மா ஆனதும் சமூக போராளியாக உருவானதும் இந்த மாரிட்ஸ்பர்க் ரயில் நிகழ்வால் தான். அப்போது காந்திக்கு வயது 24. நிறத்தால் மக்களை வேறுபடுத்தி பார்ப்பது மிகப் பெரிய சமூக அநீதி. அனைவரையும் ஒன்றாக மனித நேயத்தோடு பார்க்க வேண்டும் என்பதைத்தான் காந்தி விரும்பினார்'' என்றார். தியாகராஜர் கல்லுாரி பேராசிரியர் தமிழரசன், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை