உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பசுமை விருதுக்கு விண்ணப்பம்

பசுமை விருதுக்கு விண்ணப்பம்

மதுரை : சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு தமிழக வனத்துறை சார்பில் 100 பேருக்கு பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள் அல்லது கல்வி நிறுவனங்கள் அல்லது குடியிருப்போர் நல சங்கங்கள் அல்லது தனிநபர்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் அல்லது தொழிற்சாலைகள் ஏப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.tnpcb.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம். கூடுதல் தகவலுக்கு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை