| ADDED : ஜூன் 19, 2024 04:45 AM
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) அலுவலகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க் கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் வாசுகி முன்னிலை வகித்தார்.சொத்துவரி, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, புதிய குடிநீர் இணைப்பு தொடர்பாக 63 மனுக்கள் அளிக்கப்பட்டன. விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் புதிய பாதாளச் சாக்கடை வசதி எப்போது கிடைக்கும் என மக்கள் கேட்டனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பதில் அளித்தனர்.துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் பார்த்தசாரதி, செயற்பொறியாளர் (திட்டம்) மாலதி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் பூபதி, நிர்வாக அலுவலர் மணி, உதவி வருவாய் அலுவலர் லோகநாதன், கண்காணிப்பாளர் லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எங்கே கவுன்சிலர்கள்
இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. மண்டல குறைதீர் கூட்டத்தில் வார்டு குறைகளை மக்கள் கூறும்போது கவுன்சிலர்கள் பங்கேற்றால் தான் வார்டு நிலவரம் தெரியும். அப்போது தான் மாநகராட்சி கூட்டத்தில் வார்டு பிரச்னைகளை கவுன்சிலர்களால் பேச முடியும். ஆனால் பொதுவாக மண்டல குறைதீர்க் கூட்டங்களில் கவுன்சிலர்கள் பங்கேற்பது இல்லை. இதுகுறித்து கவுன்சிலர்கள் சிலரிடம் கேட்டபோது மண்டல குறைதீர் கூட்டங்களுக்கு கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை என்றனர்.