| ADDED : ஆக 22, 2024 02:51 AM
மதுரை: மதுரை சி.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கோல்கட்டா மருத்துவக் கல்லுாரி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியைகள் கருப்பு ஆடை அணிந்து பங்கேற்றனர்.தலைமையாசிரியர் ஜவஹர்லால் நேரு பேசுகையில், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மாணவிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதுபோன்ற சம்பவம் குறித்து ஆசிரியர், பெற்றோரிடம் மாணவிகள் தைரியமாக தெரிவிக்க வேண்டும். அரசின் உதவி எண் 1098க்கு தயக்கமின்றி புகார் தெரிவிக்க வேண்டும் என்றார். உதவி தலைமையாசிரியை இந்திரா, என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் கோகிலா, பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செல்வபிரபாவதி, ஆசிரியைகள் பங்கேற்றனர்.