உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் பாதுகாப்புடன் உண்டியல் எண்ணிக்கை

போலீஸ் பாதுகாப்புடன் உண்டியல் எண்ணிக்கை

திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா சித்தாலை சுந்தரவல்லி அம்மன் கோயில் அறநிலையத்துறை பொறுப்பில் உள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. திருமங்கலம் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சித்தாலை வைரமோகன் தலைமையிலான போராட்ட குழுவினர், தங்கள் குலதெய்வக் கோயிலில் அறநிலையத்துறை தலையிடக் கூடாது, உண்டியல் காணிக்கையை எண்ணக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். உண்டியலில் காணிக்கை பணம் ரூ. 2 லட்சத்து 73 ஆயிரத்து 337 இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை