உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாரதியார் நினைவு தினம்..

பாரதியார் நினைவு தினம்..

மதுரை: மதுரை மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் பாரதியார் 103வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மதுரை சேதுபதி பள்ளியில் உள்ள சிலைக்கு மாவட்ட தலைவர் ரங்கராஜன் தலைமையில், மாநில துணைத் தலைவர் இல.அமுதன், பள்ளித்தாளாளர் பார்த்தசாரதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில செயலாளர் முரளி, கொள்கை பரப்புச்செயலாளர் வெங்கடேஷ்,ஜெய்ஹிந்த்புரம் கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர் தலைவர் கணபதி, செயலாளர் பாபு, மாவட்ட செயலாளர் சந்திரசேகர் பங்கேற்றனர்.* மதுரை இலக்கிய பேரவை சார்பில் தலைவர்சண்முக திருக்குமரன் மாலை அணிவித்தார். செயலாளர் போத்திராஜன், துணைத் தலைவர் சரவணன், பொருளாளர் ராம்நாத்பாபு, மள்ளர் சேனைத் தலைவர் சோலை பழனிவேல்ராஜன், தலைமை ஆசிரியர் நாராயணன் பங்கேற்றனர். பாரதி யுவகேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு மாலை அணிவித்தார்.

திருப்பரங்குன்றம்

ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றம் சார்பில் பாரதியார் படத்திற்கு மன்றத் தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொருளாளர் அண்ணாமலை, நிர்வாகிகள் குலசேகரன், வேட்டையார், கிருஷ்ணசாமி, அரவிந்தன், ரவிச்சந்திரன், சங்கரய்யா, ரங்கராஜ், வெங்கடசாமி, கந்தராஜ் கலந்து கொண்டனர். பாண்டியன் நகர் பூங்காவிலுள்ள பாரதியார் சிலைக்கு மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர்சுவிதா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொன்.மனோகரன், நாகராஜன், கவுன்சிலர் இந்திராகாந்தி, தி.மு.க., தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல், நிர்வாகிகள் சுந்தர், கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர். முற்போக்கு கவிஞர் பேரவை முருகன் தலைமையில் நிர்வாகிகள்பசுபதி, அழகப்பன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ