உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சமூக சீர்திருத்தத்தில் உச்சம் தொட்டது பிராமணர் சமுதாயமே: பா.ஜ., மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் பேச்சு

சமூக சீர்திருத்தத்தில் உச்சம் தொட்டது பிராமணர் சமுதாயமே: பா.ஜ., மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் பேச்சு

மதுரை: ''சமூக சீர்திருத்தத்தில் உச்சம் தொட்டது பிராமணர் சமுதாயமே'' என மதுரையில் நடந்த தமிழ்நாடு பிராமண சமாஜ மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் பா.ஜ., மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் பேசினார்.அவர் பேசியதாவது: ஒவ்வொரு கிராமம், மனிதன், சமுதாயம், தேசத்திற்கு ஆன்மா உள்ளது போல, பிராமண சமூகத்திற்கும் ஆன்மா உள்ளது. தர்மத்தை காப்பாற்றுவதில் இந்த சமுதாயம் முன்னணியில் உள்ளது. சுதந்திர போராட்டத்தை முதன்முதலில் மக்கள் இயக்கமாக மாற்றியதும், சமுதாய சீர்திருத்தத்தில் உச்சம் தொட்டதும் பிராமணர் சமுதாயம்தான்.சுப்ரமணிய பாரதி சொல்லாத எதை திராவிட கட்சிகள் கூறியுள்ளன. பெண் கல்வி, தீண்டாமை ஒழிப்பு பற்றியெல்லாம் பாரதி கூறியுள்ளார். பட்டியல் இனச் சிறுவனுக்கு பூணுால் அணிவித்தார் அவர். நந்தனைப் போன்ற பார்ப்பனர் கிடையாது என்றார்.அவர்தான் காக்கை, குருவி எங்கள் ஜாதி என்று ஜீவகாருண்யம் பாடினார். மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தவரை அழைத்து செல்ல முயன்றவர் வைத்தியநாத அய்யர். ஆனால் அப்போது மதுரையில் இருந்த நீதிக்கட்சித் தலைவர் இதற்காக துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.திருக்குறள், கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் வ.வே.சு., அய்யர்தான். இவ்வாறு தமிழைக் காப்பாற்ற வேறு யாரும் செய்யவில்லை. மம்தா பானர்ஜி, சந்திரபாபுநாயுடு, முலாயம்சிங்யாதவ் போன்றவர்களின் கட்சிகள் தேசியத்தை மறுதலிக்கும் கட்சிகள் அல்ல. ஆனால் தமிழகத்தில் தி.மு.க., போன்ற கட்சிகள் தேசியத்தை நிபந்தனையுடன் ஏற்கும் கட்சிகளாகவே உள்ளன. மற்ற மாநிலங்களில் ஹிந்து மதம், ஹிந்துக்கள், தேசியம் மீது மற்ற மாநில கட்சிகளுக்கு கோபம் ஏதுமில்லை. ஆனால் தி.மு.க., இவற்றை நிந்தனை செய்யும் கட்சியாக உள்ளது. இவ்வளவுக்கு பின்னும் லோக்சபா தேர்தலில் அவர்களை தேர்வு செய்துள்ளதால், இதனை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு பா.ஜ., செயல்படுகிறது. 2026ல் ஆட்சி மாறியதும் காட்சிகளும் மாறும். தற்போது சமூக, கல்வி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடையும் அமல்படுத்த நீதிமன்றம் வலியுறுத்தியும் தமிழகத்தில் அமல்படுத்தவில்லை. அதனை ஆட்சி மாறியதும் அமல்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை