மேலும் செய்திகள்
ரசித்தனர்.அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்
03-Mar-2025
திருப்பரங்குன்றம்: .தி.மு.க., கிழக்கு மாவட்டம் ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ் வரவேற்றார். துண்டு பிரசுர வினியோகத்தை ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன், பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர். நிர்வாகிகள் செல்வகுமார், பன்னீர் செல்வம், கார்த்திக் கலந்து கொண்டனர்.
03-Mar-2025