மேலும் செய்திகள்
ராமகிருஷ்ணர் பக்தர்கள் மாநாடு
1 hour(s) ago
வாவிடமருதுார் வராத அரசு பஸ்
1 hour(s) ago
சேலம் மத்திய சிறையில் மதுரை கைதி சாவு
1 hour(s) ago
பல் டாக்டர் வீட்டில் நகை திருடியவர் கைது
1 hour(s) ago
மதுரை : மதுரை பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக நுழைவிடத்திலேயே குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கின்றன.மதுரை கலெக்டர் அலுவலகத்தோடு இணைந்தது பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம். அண்ணா பஸ் ஸ்டாண்ட் எதிரே 2 ஏக்கரில் உள்ள இந்த வளாகத்தில் மாவட்ட பஞ்., அலுவலகம், நிலஅளவைத்துறை துணை இயக்குனர் அலுவலகம், நிலஅளவை ஆவண காப்பகம், கள்ளர் சீரமைப்புத்துறை, முத்திரைத்தாள், நிலஎடுப்பு தாசில்தார் அலுவலகங்கள், மாவட்ட ஆவண காப்பகம், சித்த மருத்துவமனை, ஊரக வளர்ச்சி முகமை கட்டடம், இ சேவை மையம் இயங்குகின்றன.இத்தனை முக்கியத்துவம் கொண்ட இந்த மாவட்ட வளாகமோ பராமரிப்பின்றி உள்ளது. நுழைவுப் பாதையிலும், கட்டடத்தின் பிரதான வாயிலிலும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பது, அங்குள்ள துாய்மைப் பணியாளர் முதல் அதிகாரிகள் வரை யார் கண்ணிலும் படாதது ஆச்சரியம்.கட்டடம் கட்டிய பின் ஒருமுறைகூட புதுப்பொலிவு பெற பெயின்டிங் வேலையே நடக்கவில்லை போலும். ஒரு மாவட்ட அலுவலகமே நோய் பரப்பும் இடம் போல பொலிவிழந்து உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் வசதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் கலெக்டர் சங்கீதா இந்த வளாகத்தையும் பராமரித்து, வெளியிடங்களில் வாடகைக்கு இயங்கும் அரசு துறைகளை இவ்வளாகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago