மேலும் செய்திகள்
நெல்லைக்கு சிறப்பு ரயில்
11 minutes ago
ரயில்வே ஆலோசனை குழுவுக்கு கவுரவ ஊதியம்
13 minutes ago
மதுரை- சினிமா- 11.10
15 minutes ago
கொட்டாம்பட்டி : மணப்பட்டி ரேஷன் கடையில் இதுவரை அரிசி தவிர இம்மாதத்திற்கான பொருட்கள் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.கார்டுதாரர்கள் கூறியதாவது : ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து முன்னறிவிப்பு செய்வது கிடையாது. திடீரென கடை திறப்பார்கள். தெரிந்து வந்தவர்களுக்கு மட்டும் பொருட்கள் வழங்குவர். மறுநாள் சென்றால் விற்பனையாளர் இருப்பது இல்லை. இம்மாதம் அரிசி மட்டுமே வழங்கினர். பாமாயில், பருப்பு, சீனி எதுவுமே வழங்கவில்லை. கேட்டால் சப்ளை இல்லை என்கின்றனர் என்றனர்.கூட்டுறவு இணைப் பதிவாளர் குருமூர்த்தியிடம் கேட்டபோது, ''சார் பதிவாளர் சீனியப்பா மூலம் விசாரித்து பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.
11 minutes ago
13 minutes ago
15 minutes ago