உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டாஸ்மாக்கிற்கு எதிராக வழக்கு

டாஸ்மாக்கிற்கு எதிராக வழக்கு

மதுரை:தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் சுருளி.இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: கம்பம் அங்கூர்பாளையம் ரோடு அருகே உத்தப்புரத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: அங்கு டாஸ்மாக் கடை துவங்கப்படமாட்டாது. இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ