உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் கோழியால் பலி

மதுரையில் கோழியால் பலி

மதுரை : மதுரையில் சிக்கன் சாப்பிட்டதால் இன்ஜினியர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தாரா என விசாரணை நடக்கிறது.மதுரை கோசாகுளம் ஆனந்த்ராஜ் 37. பி.டெக்., முடித்தவர். வீட்டிலேயே ஆன்லைன் மூலம் தனியார் நிறுவனத்திற்காக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி சவுமியா, 7 வயதில் ஒரு மகன் உள்ளனர். சம்பவத்தன்று கடையில் சிக்கன் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். மறுநாள் அதை சூடுபடுத்தி காலையிலும் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். உடனே அவரை அப்பகுதி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை