உசிலையில் சுத்தம் என்பது நமக்கு
உசிலம்பட்டி; உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.நல்லுத்தேவன்பட்டி கண்மாய் பகுதியில் கோழிக்கழிவுகள் கொட்டுகின்றனர். நகராட்சி குப்பைக்கிடங்கில் எப்போதும் தீ பற்றி எரிவதால் ஏற்படும் புகையினால் சுகாதார கேடு ஏற்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை காரணம் காட்டி சந்தை திடலுக்குள் சுகாதார பணிகளை மேற்கொள்வதில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை என விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர். தாசில்தார் தலைமையில் சந்தை திடலில் குப்பையை அகற்றி சுகாதாரப் பணிகள் மேற் கொள்வது என முடிவு செய்தனர்.செக்கானுாரணி வரை இயக்கப்பட்ட 5 டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. குப்பணம்பட்டி, வாலாந்துார், செல்லம்பட்டி, கருமாத்துார் செல்லும் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. அதிக கட்டணம் செலுத்தி பஸ்களில் ஏறிச்செல்கின்றனர். பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.வைகை அணையில் 67 அடிக்கும் குறைவாக நீர்மட்டம் செல்லும் போது சூரிய மின்சக்தி மூலம் மோட்டார் இயக்கி 58 கிராம கால்வாயில் தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.