உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

மதுரை : மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறுவோர், வி.ஏ.ஓ.,க்களிடம் இருந்து தங்கள் வாழ்நாள் சான்று பெற்று ஜூன் 15 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.கலெக்டர் சங்கீதா கூறியிருப்பதாவது: 40 சதவீதத்திற்கு மேல் பாதித்த மனவளர்ச்சி குன்றியோர், 75 சதவீதத்திற்கு மேல் பாதித்த பல்வகை மாற்றுத் திறனாளிகள், பார்க்கின்சன் நோய் மற்றும் தசைச்சிதைவு, நாட்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர், தொழுநோயால் பாதித்து குணமடைந்தோருக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படுகிறது.அவர்கள், வி.ஏ.ஓ.,க்களிடம் கையொப்பம் பெற்ற வாழ்நாள் சான்று, தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, தனித்துவ அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், வங்கிக் கணக்கில் பாதுகாவலராக உள்ளவரின் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றோர்/உறவினர்கள் நேரில் (மாற்றுத்திறனாளிகள் வரவேண்டாம்) சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களுக்கு 0452- 252 9695 ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை