உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்சாரம் பாய்ந்து மாடு பலி

மின்சாரம் பாய்ந்து மாடு பலி

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி பல இடங்களில் மின்ஒயர்கள் திறந்த வெளியில் தொங்குகின்றன.இதுகுறித்து புகார் அளித்தும் மின்வாரியம், மாநகராட்சி சார்பில் நடவடிக்கை இல்லை. சில நாட்களுக்கு முன் மழை பெய்தபோது வடக்கு கோபுரம் பகுதியில் மின் விளக்கு ஒயரை கடித்த பசுமாடு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.இந்நிலையில் நேற்றும் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியது. கீழமாசி வீதி பகுதியில் மின்சாரம் தாக்கி மாடு ஒன்று பலியானது, பக்தர்களை கவலையடைய செய்துள்ளது. கோயிலை சுற்றி பாதுகாப்பில்லாமல் கிடக்கும் மின்ஒயர்கள் குறித்து மின்வாரியம், மாநகராட்சி சார்பில் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !