உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காற்று வீசினால் கரண்ட் கட்

காற்று வீசினால் கரண்ட் கட்

கொட்டாம்பட்டி, : உதினிபட்டியில் 7 நாட்களாக மின் சப்ளை இல்லாததால் பயிர்கள் கருகி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.விவசாயி அருணாசலம்: பலஆண்டுகளுக்கு முன் ஊன்றப்பட்ட மின்கம்பங்கள் என்பதால் சாய்ந்தும், மின் கம்பிகள் தாழ்வாகவும் உள்ளது. அதனால் காற்று வீசும்போது கம்பிகள் உரசுவதால் மின்சப்ளை துண்டிக்கப்படுகிறது. மின்வாரியத்தில் ஆள் பற்றாக்குறையால் சீரமைக்க முடியவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். கூடுதல் ஆட்களை கொண்டு சரி செய்ய கட்டணமாக ரூ.10 ஆயிரம் வரை வசூலித்தனர். ஆனால் 7 நாட்களாக மின்சப்ளை முற்றிலும் இல்லை. பயிர்கள் கருகிவிட்டன என்றார்.மின் உதவிபொறியாளர் பாலமுருகன் கூறுகையில் ''மின்சாரம் முற்றிலும் இல்லை என்பது தவறு. குறைந்தளவு மின்சாரம் வருவதால் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படவுள்ளது. மின்கம்பிகள் மீது தென்னை மரத்தின் கிளைகள் விழுவதால் ஏற்படும் மின்தடையை சரி செய்து வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Varadarajan Nagarajan
மே 05, 2024 14:17

தற்பொழுதெல்லாம் மழை பெய்தாலோ, காற்று வேகமாக வீசினாலோ, மின்னல் மின்னினாலோ மின் சப்ளை இருக்காது பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தாலும் மின் சப்ளை தானாக நிறுத்தப்படாமல் உயிரப்புகள் நடக்கின்றன தாழ்வான மின் கம்பிகளில் வாகனங்கள் உரசி மின் விபத்துக்களும் நடக்கின்றன பூமியிலிருந்து மின் கம்பிகள் குறைந்தபட்ச உயரம்கூட இல்லாமல் உள்ளதை பல இடங்களில் காணலாம் மின் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் மிக முக்கியமானது ஏர்த்திங் எனப்படும் நிலத்துடனான இணைப்பு இது சரியாக இருந்தால்தான் அனைத்து பாதுகாப்பு சாதனங்களும் செயல்படும் மின் வாரிய வழித்தடங்களில் பல இடங்களில் இது சரியாக அமைக்கப் படாமலும், பராமரிக்கப்படாமலும் மின் விபத்துக்கள் ஏற்படுகின்றது இதில் மின்வாரியம் கவனம் செலுத்துவது இல்லை கோடை காலத்தில் தற்சமயம் பல இடங்களில் ஏற்படும் குறைத்த மின் அழுத்தம் ஒருமுனை மின் இணைப்புகளுக்கு இருக்கவேண்டிய V மின் விநியோகம் -V தான் உள்ளது இதனால் மின் கம்பிகள் அதிகம் சூடாகி விபத்துக்கள் நடக்கின்றன அந்த அளவில்தான் மின் விநியோக வழித்தடங்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தரம் உள்ளன


சமீபத்திய செய்தி