உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீனாட்சி அம்மன் கோயிலில் இன்றிரவு முழுவதும் தரிசனம்

மீனாட்சி அம்மன் கோயிலில் இன்றிரவு முழுவதும் தரிசனம்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு 10:00 மணி முதல் கோயில் நடை திறக்கப்பட்டு நாளைஅதிகாலை 5:00 மணி வரை விடியவிடிய அபிஷேகம்,ஆராதனைநடக்கிறது.அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை-இன்றிரவு 10:00 மணி முதல் 10:40 மணி வரை, இரண்டாம் கால பூஜை இரவு 11:00 மணி முதல் 11:40 மணி வரை, மூன்றாம் கால பூஜை அதிகாலை 12:00 மணி முதல் 12:40 மணி வரை, நான்காம் கால பூஜை அதிகாலை 1:00 மணி முதல் 1:40 மணி வரை நடக்கும்.சுவாமி சன்னதியில் முதல் கால பூஜைஇன்றிரவு 11:00 மணி முதல் 11:45 மணி முதல், இரண்டாம் கால பூஜை அதிகாலை 12:00 மணி முதல் 12:45 மணி வரை, மூன்றாம் கால பூஜை அதிகாலை 1:00 மணி முதல் 1:45 மணி வரை, நான்காம் கால பூஜை அதிகாலை 2:00 மணி முதல் 2:45 மணி வரை நடக்கிறது. அதிகாலை 3:45 மணிக்கு அர்த்தஜாம பூஜை,4:00 மணிக்கு பள்ளியறை பூஜை, 5:00 மணிக்கு திருவனந்தல் பூஜை நடக்கிறது.பக்தர்கள் விடிய விடிய தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை