உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மகள் கொலை: தந்தைக்கு ஆயுள்

மகள் கொலை: தந்தைக்கு ஆயுள்

மதுரை: டி.கல்லுப்பட்டி அருகே வி.ராமநாதபுரம் முருகன்53. கொத்தனார். மது பழக்கத்திற்கு அடிமையானார்.வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதை அவர்களது 5 வயது மகள் தனது பாட்டி மற்றும் அருகில் உள்ளவர்களிடம் கூறினார். 2018 ல் இரவு தகராறு ஏற்பட்டது. முருகன் போதையில் மனைவியை தாக்கினார். இதை பார்த்த மகள் யாரிடமாவது சொல்லிவிடுவார் எனக் கருதி கோடாரியால் தலையில் தாக்கினார். சிறுமி இறந்தார். வில்லுார் போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். மதுரை 5வது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. முருகனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை