உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகள் மறியல்

மாற்றுத்திறனாளிகள் மறியல்

திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சாத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சாத்தங்குடி, கண்டுகுளம், புலியூர் கிராமங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 மாதங்களுக்கும் மேலாக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கவில்லை. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லாததால் மாற்றுத்திறனாளிகள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று திருமங்கலம் – உசிலம்பட்டி ரோட்டில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாவட்ட தலைவர் முருகன், ஒன்றிய தலைவர் நாகராஜ், செயலாளர் சின்னச்சாமி தலைமையில் அரைமணி மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !